2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

காங்கேசன்துறை – வவுனியா இடையிலான ரயில்பாதை புனரமைப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 17 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

காங்கேசன்துறை - வவுனியாவுக்கு இடையிலான புகையிரதப்பாதை இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படவுள்ளது. நாளை புதன்கிழமை காலை, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இந்தியத் தூதரினால் இப்பாதையை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன் ஒரு கட்டமாக கடந்த 1990ஆம் ஆண்டின் பின்னர் பராமரிப்பு அற்று காணப்பட்ட இப்புகையிரத வளாகத்தை துப்பரவு செய்யும் பணியில் பாரிய இயந்திரங்கள் சகிதம் தொழிலாளர்கள ஈடுபடுத்தப்பட்டு வளாகம் துப்பரவு செய்யும் நடவடிக்கை முழு மூச்சாக நடைபெற்று வருகின்றது.

கடந்த காலத்தில இப்புகையிரத நிலையம் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாழவும் அதேவேளை பல தடவைகள் குண்டுத் தாக்குதல்களுக்கும் உள்ளாகியதும் புகையிர நிலையத்தின் முன்னாள் உள்ள நிலத்தின் கீழான சுரங்கப் பாதை பல ஆண்டுகள் பொது மக்களுடைய பதுக்கு குழியாகவும் உயிர் காக்கும் இடமாகவும் காணப்பட்டது.

தற்போது புகையிரத நிலையம் பல்வேறு நபர்களினாலும் இடித்துடைக்கப்பட்டு களவாடப்பட்ட நிலையில் பொழிவிழந்து காணப்படுகின்றது. மீண்டும் இப்புகையிரத நிலையம் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றமை யாழ் குடா நாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதுடன் போக்குவரத்தில் காணப்படும் சுமையையும் குறைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

முக்கியமாக கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது புகையிரத ஆனைச் சீட்டைக் கூட பயன்படுத்தாத நிலமை காணப்பட்டது. புகையிரதம் ஓடமாக இருந்தால் அவர்களுக்கும் கூட பெரும் நன்மையாக அமையமுடியும் என்பதில் சநதேகம் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X