2025 மே 16, வெள்ளிக்கிழமை

காணாமல் போன இளம் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 26 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், தென்மராட்சியின் மறவன்புலவு - தனங்கிளப்புப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும்  இளம் பெண் ஒருவரின் எலும்புக்கூடு நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுகுவெளி – கேரதீவுப் பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு  தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் எலும்புக்கூடுகளை  மீட்டுள்ளதாகவும் சாவகச்சேரிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பெண் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளையில் காணாமல் போயிருந்தார் என தெரிவித்த பொலிஸார்,  இவர் காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடைகளை வைத்து 28 வயதான சுப்பிரமணியம் அற்புதமலர்  என்பவரது எலும்புக்கூடு என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் கூறினர்.

இப்பெண் காணாமல் போனமை தொடர்பில் அவரது உறவினர்கள் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண  அலுவலகத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்று சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியும் விசாரணை மேற்கொண்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக எலும்புக்கூடுகளை ஒப்படைக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .