Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சிற்கும் கடற்றொழிலாளர் சமாசங்களிற்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பதிவு செய்யப்பட்ட கடற்றொழிலில் ஈடுபடுகின்ற படகுகளுக்கு ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாவும் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபாவும் மானியமாக வழங்கப்படவுள்ளதாகவும் ஆர்.இரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். கடற்றொழிலாளர் சமாசம் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சமர்ப்பித்திருந்ததுடன் மன்னார், வடமராட்சி வடக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
16 minute ago
26 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
5 hours ago
5 hours ago