2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவு

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது பகிஷ்கரிப்பு போராட்டத்தை மாணவர்களின் எதிர்காலக் கல்வி நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்சானந் தாக்கப்பட்டதை கண்டித்தும், மாணவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்யக்கோரியும் இப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு ஆர்வலர்களது வேண்டுகோளின் பிரகாரமும் பகிஷ்கரிப்பினை கைவிட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
எனினும் மாணவர்கள் பயத்தின் காரணமாக தமது குரல்களை அடக்கி கொண்டு விட்டதாக இவ்விடயத்தினை கருதிக்கொள்ள கூடாது எனவும் தொடர்ந்தும் பல்கலைக்கழக மாணவர்களுக்காகவும் தமிழ் சமூகத்திற்காகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கும் எனவும் மாணவர் ஒன்றியத்தின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்தோடு, எதிர்வரும் 28 ஆம் திகதி பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு மாணவர்கள் சென்று தமது கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் யாழ்.பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X