2025 மே 19, திங்கட்கிழமை

நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படவேண்டும் : அமைச்சர் டக்ளஸ்

Kogilavani   / 2012 ஜூலை 02 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


'நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்கப்படவேண்டும். அத்தோடு இந்த பிரச்சினையை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பிழையானவர்கள் கைகளுக்கு இந்த விடயம் போகக் கூடாது'  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள வேலையற்ற 2,039 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நிலம் தொடர்பான பிரச்சினைகளில் உண்மையிருக்கிறது. ஆனால் இப் பிரச்சினைகள் பிழையானவர்களின் கைகளுக்கு சென்று கடந்த காலங்களை போன்று மாறிவிடக் கூடாது.

பட்டதாரிகளின் வாழ்க்கையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். கடந்த காலங்களில் நீங்கள் கல்வி கற்கும் போது தவறான வெளிப்பாடு காரணமாகவும் வேறுபட்ட சூழ்நிலையினால் அரசு தொடர்பான உங்கள் நிலைப்பாடு மாற்றம் கண்டது. இன்று சரியான நிலைப்பாட்டிற்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.

இந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தை சரியாக உங்கள் சமூகத்திற்கு பயன்படுத்தி நீங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும். இந்த நியமனங்கள் வழங்குகையில் பாரபட்சம் காட்டப்படவில்லை' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X