2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். நீதிமன்றில் அநாகரீகமான ஆடைகளை அணிந்து வர தடை

Super User   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். நீதிமன்ற வளாகத்திற்குள் அநாகரீகமான ஆடைகளை அணிந்து வருவதை நீதிமன்ற நிர்வாகம் தடை செய்துள்ளது என யாழ். நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா தெரிவித்தார்.

யாழ். நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறும் போது சிலர் அநாகரீகமான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.  இதனால் மன்றிற்கான தன்மதிப்பு இழக்கப்பட்டு நீதிமன்றிற்கான மதிப்பும் கௌரவமும் இழிவாக்ககும் செயலென கருதுவதால் நாகரீகமான ஆடைகளை அணிந்து வருமாறும் நீதிமன்ற நிர்வாகத்தினர் கட்டளையிட்டுள்ளனர்.

நீதிமன்றில் பல்வேறு வகையான நிறங்கள் மற்றும் ஆடைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி உரையாடுதல் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் தமது உடைகளில் சிவப்பு மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வடிவங்கள் அமைக்கப்பட்ட ஆடைகளை தவிர்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் சாறி, சுடிதார், நீள பாவாடை, சட்டை போன்ற ஆடைகளையும் ஆண்கள் நீள காற்சட்டை மற்றும் பொதுவான நிற சேட் போன்றவற்றையும் அணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையுமாறும் நீதிமன்ற நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகைய செயற்பாட்டிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X