2025 மே 19, திங்கட்கிழமை

கிராம சேவையாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (ஜெ.டானியல்)
யாழ். மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று நேற்று புதனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சி பட்டறையில் கிராம சேவையாளர்களுக்கான சட்டம், நிர்வாகம்போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அரசாங்க சேவைப் பயிற்சி நிறுவனமும், யு.என்.டி.பியின் பிணக்குகளுக்கு மாற்றுத்தீர்வு காணுவதற்கான நிறுவனமும் இணைந்து இப்பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர்களில் மூன்றாவது அணியினருக்கு இப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகள் அரசாங்க சேவைப்பயிற்சி நிறுவனம், மற்றும் பிணக்குகளுக்கு மாற்றுத் தீர்வு காணுவதற்கான நிறுவனம் ஆகியன இணைந்து இவ்வருடம் மே மாதம் 3, 4, 5 ஆம் திகதிகளிலும், யூன் மாதம் 25, 26 ஆம் திகதிகளிலும் நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரச சேவை பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் றஞ்சித் அசோக்கா மற்றும் பிணக்குகளுக்கு மாற்றுத் தீர்வுகாணும் நிறுவனப் பணிப்பாளர் ஆன் பனான்டோ ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரைகளை நடத்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X