2025 மே 19, திங்கட்கிழமை

வட மாகாண ஆளுநர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ஜெ.டெனியல்)

வட மாகாண ஆளுநர் ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 12.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர்  சுவாசிக்க சிரமப்பட்டமையினால் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதி சிகிச்சைக்காக பலாலி இரர்ணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

சுன்னாகம், கந்தர் ஓடை பிரதேசத்தில் பாடசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பும் போதே, ஆளுநருக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விமானத்தின் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X