2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்: கல்வி அமைச்சர

Kogilavani   / 2012 ஜூலை 16 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே..பிரசாத்)
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் பந்தல குணவர்தன தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திபபொன்றின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

புதிய அதிபர் நியமனம் தொடர்பாக வேம்படி மகளீர் கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற பிரச்சனைக் தொடர்பாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு எடுத்துக் கூறினர்.

இச் சந்திப்பில் பாராம்ரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாடசாலை அதிபர் ரஜினி முத்துக்குமாரன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X