2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: சிறிதரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 ஜூலை 17 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் மரணத்தைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்  யாழ்ப்பாணத்தில் நாளை புதன்கிழமை  நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும்  நாளை புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்படவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழு  ஆதரவையும் வழங்கும்.

தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள,; தமிழர்களின் நிலங்களை பறிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள்,  தமிழ் இளைஞர்கள் சிறைக்கூடங்களில் கொல்லப்படுகின்றமை ஆகியவற்றுக்கு எதிராகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றமை,  அவர்கள் இராணுவப் புலனாய்வாளர்களாலும் பொலிஸாரினாலும்  அடிக்கடி விசாரணைக்குட்படுத்தப்படுகின்றமை ஆகியவற்றுக்கும் நாளைய ஆர்ப்பாட்டத்தின்போது கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளது' என்றார். 

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசபை மற்றும் நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம்  வெற்றி பெறுவதற்கான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X