2025 மே 19, திங்கட்கிழமை

த.தே.ம.மு. கட்சி உறுப்பினர்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு த.தே.கூ. கண்டனம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் வீடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் மேற்படி வீடுகளின் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதுடன் கற்களும் வீசப்பட்டு  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது பற்றி தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவிக்கையில்,

அராஜகங்கள், வன்முறைகள் நடைபெறுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கின்றது. இவ்வாறான செயற்பாடகளுக்கு எதிராகவே நாங்கள் கிளர்ச்சி செய்யவேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாடுகள், இராணு, பொலிஸ் ரோந்துகள், சோதனைச் சாவடிகள் இருக்கின்ற போதும் தொடர்ச்சியாகவும் பல முறை நாங்கள் கண்டனங்கள் தெரிவித்தும் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜனநாயகத்திற்கு மேலும் மேலும் சாவுமணி அடிக்கின்ற செயற்பாடாகத்தான் இருக்கும். ஜனநாயக ரீதியாக மக்கள் தமது குரலை எழுப்புவதற்கு இப்படியான தடைகள் மீண்டும் எம்மை கிளர்ந்தெழச் செய்யும் என்பதைத்தான் சொல்லிக்கொள்ள விரும்பகின்றோம்' என்றார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,

'தற்போது இலங்கைத் தீவில் கழிவொயில் யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கிறீஸ் மனிதன் போய் தற்போது ஒயில் மனிதன் கொண்டுவரப்பட்டுள்ளான். எல்லாவற்றையும் பரீட்சிக்கின்ற இடமாக யாழ்ப்பாணம் பயன்படுத்தப்படுகின்றது.

இது தமிழ் மக்களுக்கு புதிய விடயம் அல்ல. 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் விமானங்கள் மூலம் மனித மலங்களும் இதற்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் விசுங்கான் ஒடுகளும் வீசப்பட்டன.

இவ்வாறன செயற்பாடுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறான இடர்கள் வந்தாலும் தமிழ் மக்கள் சோர்ந்து போகக்கூடாது. விடுதலைக்காக போராடுகின்ற இனங்களுக்கான படிக்கற்கள் அது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் தொடர்ச்சியாக இதற்காக குரல் கொடுத்து வருவோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X