2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். ஸ்டான்லி வீதியை சிங்கப்பூர் வீதியாக மாற்ற நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஜூலை 17 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

யாழ். ஸ்டான்லி வீதியை சிங்கப்பூரில் அமைந்துள்ள வீதியாக மாற்றுவதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. யாழ் வணிகர் கழகத்தின் ஒத்துழைப்புடனும் யாழ் ஸ்டான்லி வீதி கடை உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் அவ்வீதியில் நடைபாதை அமைத்தல் மற்றும் வடிகால் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்றது.

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். ஸ்டான்லி வீதிப் பகுதியில் உள்ள கடைகளிற்கு இடையுறு இன்றி வாகனங்களை தரித்து விடுவதற்றும் பாதசாரிகளின் அசௌகரியமின்றி போக்குவரத்தில் ஈடுபடுவதற்காகவும் இவ்வீதியை அழகு படுத்துவதற்கும், திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இப்பகுதியில் அமைந்துள்ள கடை உரிமையாளர்களுடன் வணிகர் கழகமும் யாழ் மாநகர சபையும் இணைந்து இன்று மாலை 4.30  மணிக்கு கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

தற்போது காபட் வீதியாக இருக்கும் ஸ்டான்லி வீதியில் இரு புறமும் மணல் காணப்படுவதனால் வெயில் காலங்களில் மணல் காற்றினால் அள்ளி வீசப்படுகின்றது. மழை காலத்தில் வெள்ளம் கடைகளுக்குள் செல்கின்ற காரணத்தினால் காபட் வீதியல் இருந்து 11௨ அடிக்கு வாய்க்கால் அமைக்கப்பட்டும், மணல் வீதிக்கு தார் போட்டு செப்பனிடுவதற்கும் கடை உரிமையாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

அதன் போது காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ள குறித்த வீதி மேலும் திருத்த வேலைகள்; மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் பிரணவன் தெரிவித்தார்.

இவ் வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் முன்னுரிமை வழங்கினால் மிக துரித கதியில் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் யாழ். வணிகர் கழக தலைவர் ஜெய்சேகரம், தொழிலதிபர் இ.ச.பேரம்பலம். யாழ். மாவட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் உட்பட யாழ் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X