2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி

Super User   / 2012 ஜூலை 17 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

தமிழ் அரசியல் கைதியின் மரணத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை நெல்லியடியில்  நடைபெறவுள்ள ஆர்பாட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்பாடாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அர்ப்பாட்டத்திற்கு தடுத்து நிறுத்தவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறி ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான அனுமதியினை பெற்றனர்.

சில தீய சக்திகள் ஆர்ப்பாட்ததை நிறுத்தவதற்கு முயற்சித்து வரும் நிலையில் இந்த  அர்ப்பாட்டத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில்  உரிய பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 18ஆம் திகதி யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னாள் நடைபெறவிருந்த ஆர்பாட்டம் நீதிமன்ற தடை உத்தரவையடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X