2025 மே 19, திங்கட்கிழமை

உதயன் ஆசிரியரிடம் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

A.P.Mathan   / 2012 ஜூலை 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியரிடம் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப்புலாய்வுப் பிரிவினர் நேற்று புதன்கிழமை யாழ். குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் மூன்று மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேமானந்தன் - தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்...

“கடந்த 11ஆம் திகதி உதயன் பத்திரிகையில் இராணுவத் தளபதி தொடர்பான செய்தியொன்றை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அந்த செய்தி நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது என்று கூறியே எம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள். குறித்த செய்திதொடர்பாக எம்மிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி யாழ். குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வரச்சொன்னார்கள். எமது பிரதம ஆசிரியர் சுகயீனம் காரணமாக செல்ல முடியவில்லை, ஆகையினால் ஆசிரியர் என்ற ரீதியில் நான் சென்றேன். நேற்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்த போதிலும், விசாரணை 10.30 மணியளவிலேயே ஆரம்பித்தது. அந்த விசாரணை 2 மணிவரை தொடர்ந்தது. கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த செய்தி தொடர்பாக என்னிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு தகுந்த பதிலினை நான் வழங்கியிருந்தேன்...” என்று குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X