2025 மே 19, திங்கட்கிழமை

'யாழில் உறவினர்களாலேயே அதிகளவான சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்'

Menaka Mookandi   / 2012 ஜூலை 19 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். மாவட்டத்தில் சிறுவர் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் இவற்றில் பல சம்பவங்கள் உறவினர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளதாகவும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

யாழில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கடந்த காலங்களை விட இம்முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் செயலாக்கமுள்ளதாக இல்லை எனவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

யாழில் சிறுவர் நீதிமன்றங்கள் இருக்கின்றதினால் சிறுவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்கு நீதியை வழங்கி வருகின்றது.

குறிப்பாக உறவினர்களினாலேயே சிறுவர்கள் அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுப்பதாக யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X