2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பருத்தித்துறை நீதிவானின் வீடு கல்வீச்சுக்கு இலக்கானதாக பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 20 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். பருத்தித்துறை நீதிவான் சிறிநிதி நந்தசேகரனின்  வீடு  நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இனந்தெரியாதோரின்  கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் நேற்று வியாழக்கிழமை அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

நெல்லியடியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென யாழ். பருத்தித்துறை நீதிவான் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக நெல்லியடிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ். நெல்லியடியிலுள்ள இந்நீதிவானின் வீடு பலமுறை கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதென அவர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X