2025 மே 19, திங்கட்கிழமை

இராணுவத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

Super User   / 2012 ஜூலை 21 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          
         (எஸ்.கே.பிரசாத்,ரஜனி)

யாழ். அச்செழு பிரதேசத்தில் இராணுவத்தின் 511 ஆவது படையணித் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடு நேற்று குடும்பமொன்றுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும்  இரு பிள்ளைகளின் தாயான பிரேமலதா சிவபாலன் என்பவருக்கே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.
 
அவருக்கு நிரந்தர வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கையினை 511 ஆவது படையணித் தலைமையகத்தினதும் 3 ஆவது விஜயபாகு மற்றும் 5 ஆவது இலங்கை காலாட்படை படைப் பிரிவு அகியன நிதியினை வழங்கியிருந்ததுடன் 3 ஆவது விஜயபாகு படைப் பிரிவின் படை வீரர்கள் வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு ஆளணி ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.

அங்கு அவர் உரையபோது யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர்களால் இதுவரை சுமார் 1800 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், யாழ்ப்பாணத்தில் இராணுவ பிரசன்னம் அதிகம் என்று கூறும் அரசியல்வாதிகள் மக்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக்கொடுத்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

யார் எவ்வாறான கருத்துக்களைக் தெரிவித்து வந்தாலும்  தொடர்ந்தும் இராணுவம் மக்களுக்கான நலத்திட்டகளைச் செய்யும் என்று தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேச செயலாளர் எம் பிரதீபன், அச்செழு கிராம சேவை அதிகாரி சண்முகவேல் மற்றும் இராணுவ படையணிகளின் தளபதிகள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X