2025 மே 19, திங்கட்கிழமை

யாழ் ஆயருடன் அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜே. டானியல்)


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டேனிஸ்  யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை யாழ்.ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சந்திப்பு தொடர்பாக யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவிக்கையில்,

போருக்குப்பின்னரான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக மீள்குடியேற்றம் செய்வதில் உள்ள தாமதங்கள் மற்றும் இராணுவப் பிரசன்னங்கள் மற்றும் கல்வி அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றி  தூதுவர் கேட்டறிந்ததாக கூறினார்.

தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலங்களாக அதிகரித்துள்ளதால் தற்போது யாழ்.மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும் வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்தபோதும் சில இடங்களில்
இராணுவப் பிரசன்னங்கள் அதிகமாக காணப்படுவதாக தான் எடுத்துக் கூறியதாக ஆயர் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கல்வியின் செயற்பாடு, அபிவிருத்தி போன்றவை தொடர்பாக கலந்துரையாடியபோது, நகர்புற கல்வி தற்போது அபிவிருத்தி கண்டு வரும் நிலையில் கிராமப் புறங்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக தான் எடுத்துக் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதில் அமெரிக்கா விருப்பத்தோடு இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X