2025 மே 19, திங்கட்கிழமை

வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறவுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Super User   / 2012 ஜூலை 21 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில்  இதுவரை மீளக்குடியேறாத மக்களை அப்பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு தேவையான வாழ்வதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிமை தெல்லிப்பளை வீமன் காமம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹழந்த ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டு மீளக்குடியேறவுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கிவைத்தனர்.

வலிகாமம் வடக்கின் வித்தாபுரம், கொல்லங்கலட்டி, தந்தை செல்வாபுரம், மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு, வீமன்காமம், குரும்பசிட்டி கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முதற்கட்டமாக 5 தற்காலிக கொட்டகைகளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12 கூரைத்தகடுகளும்  அத்துடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விவசாய உபகரணப் பொதியும் இரண்டு தென்னம்பிள்ளைகளும் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X