2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைக் கட்டிடங்கள் திறப்பு

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)
யாழ்.வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைக் கட்டிடங்களை நேற்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

யாழ்.அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, அச்சுவேலி மத்திய கல்லூரி நூல் நிலையம், கோப்பாய் நாவலர் மகா வித்தியாலம், கல்வியங்காடு செந்குந்தா இந்துக் கல்லூரி ஆகியவற்றின் வகுப்பறைக் கட்டிடங்கள இதன்போது திறந்து வைக்கப்பட்டன.

அச்சுவேலி சென் திரேசா மகளிர் கல்லூரி அதிபர் அருட் சகோதரி மரிய றொசாறியோ, அச்சுவேலி மத்திய கல்லூரி அதிபர் வே.அரசகேசரி, கோப்பாய் நாவலர் மகா வித்தியால அதிபர் திருமதி எஸ்.வாகீசன், செங்குந்தா இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.பாலகுமார் ஆகியோர் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறைச் செயலாளர் சி.சத்தியசீலன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X