2025 மே 19, திங்கட்கிழமை

பஞ்சகர்ம சிகிச்சைக்கான பயிற்சி நெறியினை முடித்த வைத்தியர்களுக்கு சான்றிதழ்

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

வடமாகாண சுதேச ஆயுள்வேத வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட பஞ்சகர்ம சிகிச்சை பயிற்சி நெறியினை முடித்த வைத்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை குருநகர் ஆயுள்வேத வைத்தியசாலையில் நடைபெற்றது.

வடமாகாண சுதேச ஆயுள்வேத பணிப்பாளர் சியாமா துரைரட்ணத்தின் பணிப்புரைக்கு அமைய ஸ்வாஹசா ஆயுர்வேத வைத்திய பணிப்பாளர் எஸ்.ஏ.சந்திரா அபேயசேகரவினால் 17 வைத்தியர்களுக்கு பஞ்சகர்மா சிகிச்சை பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இச்சான்றிதழ் ஆயுள்வேத திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தகைமை உள்ளவர்கள்  தான் சிறந்த முறையான வைத்தியசேவை வழங்கப்பட வேண்டும்.  தென்னிலங்கையில் பஞ்சகர்மா சிகிச்சை மூலம் நடைபெறும் கலாச்சார சீர்கேடுகள் போன்று நடைபெறாது மிகுந்த கவனத்துடனும், தரமான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

இந்த பயிற்சி நெறியினை வேறு மாவட்டங்களிலும் பயிற்றுவதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்வதற்கு நிதி உதவிகள் போதமையாக உள்ளதால் இனிவரும் காலங்களில் இவ்வாறான பயிற்சிகளை வேறு மாவட்டங்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண சதேச ஆயுள்வேத பணிப்பாளர் சியாமா துரைரட்ணம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வடமாகாணத்தின் ஆயுர்வேத வைத்தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X