2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்,எஸ்.கே.பிரசாத்,ரஜனி)


யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அரசாங்க சொத்துக்களின் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் அதிருப்திகொண்டுள்ள இவ்வைத்தியர்கள்,  பூர்வாங்க விசாரணையில்; பரிந்துரைக்கப்பட்டதன் பிரகாரம் மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரினர்.

இவ்விசாரணை பாரபட்சமின்றி நீதியான முறையில் உடனடியாக நடத்தப்பட வேண்டுமெனக் கோரி யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
வடமாகாணம் தழுவிய ரீதியில் மருத்துவர் சங்கத்தின் தாய்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத் தலைவர் எஸ்.நிமலன்  தெரிவிக்கையில்,

'யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு பணிப்பாளரும் சுகாதார அமைச்சில் அங்கம் வகிக்கும் உயரதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். இப்போராட்டத்தின் மூலம் சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவை உடனடியாக மாற்றி ஊழலற்ற களத்தினை மாற்றித் தரவேண்டும்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X