2025 மே 19, திங்கட்கிழமை

லலித், குகன் வழக்கை விசாரித்து முடிப்பதற்காக சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பிவைக்க உத்தரவு

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

லலித், குகன் வழக்கை மிகவிரைவில் விசாரித்து முடிப்பதற்காக சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் செப்டெம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.நீதவான் நிதிமன்றில் மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித், குகன் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் லலித்தின் தந்தை வீரதுங்க, குகனின் மனைவி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இவர்கள் சார்பாக சட்டத்தரணி கோப்பகே மன்றில் ஆஜராகியிருந்தார்.

பிரதிவாதிகள் சார்பில் அரச வழக்குரைஞர் நயந்த ஆஜராகியிருந்தார். இவரது சமர்ப்பணமும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

மனுதரார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோப்பகே வாதிடுகையில் "இவர்கள் காணாமல் போனமை தொடர்பாக விளக்கத்தை நடத்தி மேல் நீதிமன்றத்திற்கு விசாரணை தொடர்பாக அறிக்கைகளை சமர்பிப்பதற்காக இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்.

நாங்கள் தாமதிக்க தாமதிக்க நீதி தாமதிக்கப்பட்டு விடும். எந்த அடிப்படைக் காரணமும் இன்றி பிரிதொரு திகதிக்கு தவணையிடுவது பெறுமதிமிக்க இந்த நீதிமன்றத்தின் மீளளிக்க முடியாத நேரத்தை வீண்விரையம் செய்கின்றது.

இந்த வழக்குக்கு தொடர்ந்து தவணையிடுவதினால் காணாமல் போனவர்களின் நிலை தொடர்பிலான உண்மை உறை நிலையில் இருக்கும். இந்த மன்றை தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு முடிவுக்கு கொண்டு வருமாறு கோருகின்றேன்" என்றார்.

பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான அரச வழக்குரைஞரான நயந்த சட்டத்தின் பிரகாரம் சாட்சிகளின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டு அவர்களின் விளக்கம் கோரப்பட வேண்டும் என கூறினார்.

இருவரது சமர்பணத்தை அடுத்து இந்த வழக்கை மிகவிரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு முடிவுக்கு கொண்டுவருவதற்கு இருதரப்பும் ஆயத்தமாக இருக்குமாறு நீதிவான் மா.கணேசராச கோரினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X