2025 மே 19, திங்கட்கிழமை

யுத்தத்தின் பின்னரும் யாழில் காணாமல் போனோர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கினறது: அஜித் குமார

Super User   / 2012 ஜூலை 24 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் குமார இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்

லலித் மற்றும் குகனின் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக யாழ். நீதிமன்றில் வழக்கு விசாரணை இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.  இந்த வழக்கு முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த,

"எங்களுக்கு அரசியல் செய்யக் கூடிய உரிமை கூட இந்த நாட்டில் இல்லை. நாங்கள் ஜனநாயக ரீதியில் என்ன செய்தாலும் மறுநாள் லலித், குகனுக்கு நடந்தது தான் நடக்கும் என்ற நிலை தற்போது நீடித்து வருகின்றது

மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றவர்களின் உரிமைகள் இங்கு நசுக்கப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்ந்து கொண்டு செல்கின்றது. என்றாவது ஒரு நாள் உண்மை வெளிவரும். அதற்கான சந்தர்பத்திற்காக உறுதியுடன் காத்திருக்கின்றோம்" என்றார்.

இதேவேளை, லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரதுங்க கருத்து தெரிவிக்கையில்,

"எமது மகனை இந்த அரசு விடுவிக்க வேண்டும். அவனை எனது கண்ணில் காட்டுங்கள் என இந்த அரசிடம் கேட்டுக் கொள்ளகின்றேன். எமது மகன் எனக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து இந்த வழக்கிற்காக வருகின்றேன்.

கடவுள் எனக்கு எனது மகனை காட்டுவார். ஆவரை விடுதலை செய்வதற்கு நீதித் துறையை நாடியுள்ளேன். அரசு நிச்சயமாக எங்கள் மீது இரக்கம் வைத்து எனது மகனை விடுதலை செய்யும் என நம்புகின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X