2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் முறையீடு

Super User   / 2012 ஜூலை 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். வைத்திய சங்க தலைவர் எஸ். நிமலன் மற்றும் புற்று நோய் வைத் ; ஜெயக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக இன்று செவ்வாய்கிழமை யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ளதாக வைத்திய சங்க தலைவர் எஸ். நிமலன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்களின் பாதுக்கப்பை உறுதிப்படுத்துமாறு கோரியமைக்கு அமைவாக எனக்கும் மருத்துவர் ஜெயக்குமாருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், ஒரு வரா காலமாக எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீ குகநேசனிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளோம்" என்றார்.

தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக முறையிடப்பட்டும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X