2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், ரஜனி)

யாழ்ப்பாணம், பாஷையூரில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவரொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணியம் தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சிறிதரன் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் பாசையூர், துண்டி கடற்கரைப் பகுதியில் வைத்தே மீட்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

'வவுனியாவைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினருடன் தங்கியிருந்த நிலையில், நேற்று அதிகாலை கடலுக்குச் சென்று வலை வீசிக்கொண்டிருந்த போது திடீரென மயக்கமுற்ற நிலையில் கடலில் விழுந்துள்ளார்.
 
கடலில் விழுந்தவரை அவதானித்த உறவினர் அவரைத் தூக்கிக்கொண்டு கரைக்கு செல்ல முற்பட்ட போது, படகைக் கொண்டு வந்து தன்னை கரைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த நபர் படகை எடுத்துக்கொண்டு அவர் நின்ற இடத்திற்கு வந்து பார்க்கும் போது அவர் காணாமல் போயிருந்தார்.

பின்னர் அதிகாலை அவரின் சடலம் கரையொதுங்கியது. இறந்தவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பாம்பு கடித்திருந்தது' என கூறினார். சடலம் இருந்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி சென்று பார்வையிட்ட பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி தெரிவித்தார். இது தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணை  மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X