2025 மே 19, திங்கட்கிழமை

காசோலை மோசடிகள் தொடர்பில் தினமும் முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காசோலை மோசடிகள் தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். பொலிஸ் நிலையப் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

காசோலைக் கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் நாளொன்றுக்கு 6 முதல் 15 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.  இம்முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குரிய திட்டங்கள் குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருவதாகவும் யாழ். பொலிஸ் நிலையப் தலைமைப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

காசோலை மோசடிகள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், நபரொருவர்; 20 இற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி காசோலைகளைக் கொடுத்து பொருட்களை வாங்கியிருப்பதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X