2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.அனலைதீவு பொது நூலகம் மற்றும் இந்து மயானம் அபிவிருத்தி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ்.ஊர்காவற்துறை பிரதேச சபையின் அனலைதீவுப் பொது நூலகம் மற்றும் இந்து மயானம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கனடாவில் உள்ள அனலைதீவு கலாசார ஒன்றியம் இவ் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என ஊர்காவற்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பொது நூலகத்தின் சுற்றுமதில் புனரமைக்கப்பட்டு நுளை வாயிலில் வில் வடிவிலான பெயர்ப்பலகை மற்றும் மலசலகூடம் அமைக்கப்பட்டு நூல் நிலையத்திற்கான பல்வேறுபட்ட நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அனலைதீவு பொது இந்து மயானத்திற்கான நுளைவாயில் மற்றும் இந்து மயானத்திற்கான மதில் போன்றனவும் கலாசாரத் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்டுள்ளன.

அனலைதீவு பிராதான வீதியில் நூல் நிலையத்தில் இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள் பாலம் ஒன்று உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இப்பாலத்தையும் கலாசார ஒன்றியம், பிரதேச சபை அல்லது அரச நிதியில் இருந்து திருத்துவதற்கு ஊர்காவற்துறை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X