2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு: யாழ்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜே.டேனியல்)
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாகவும் சட்டமா அதிபரின் பதில் கிடைத்தவுடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2011 ஆண்டு ஜூலை மாதம் அவர் தாக்கப்பட்டுள்ளார். ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து, கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிகையாளர்  சந்திப்பில் ஊடகவியலாளர்களினால்
கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு இன்று பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர், இந்தச் சம்பத்துடன் நேரடித் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்தச் சம்பவத்தில் ஒரு சட்டத்தரணி தொடர்புபட்டிருப்பதால் நடவடிக்கை தொடர்பாக விசாரணை  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கை தொடர்பான சட்டமா
அதிபரின் உத்தரவு கிடைத்தவுடன் இவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பூரன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 2009 ஆண்டு இலங்கையில் டெங்கு நோய் உள்ள மாவட்டத்தில் யாழ்ப்பாணம் 3 ஆம் இடத்தில் இருந்ததாகவும் தற்போது முழுமையாக டெங்கு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, யாழ் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வாய்க்கால் மூலம் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.  இது பிரதான வாய்க்காலாக இருக்கின்ற படியினால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X