2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மனைவியை தாக்கிய கணவரும் தவறாக சிகிச்சையளித்த சிற்றூழியரும் கைது

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

அனலைதீவு பகுதியில் கணவனால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு தவறாக வைத்தியம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டதால் உடலில் 30ற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ள மேற்படி பெண், அனலைதீவு பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவருடன் கணவனும் சேர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர்.

எனினும் பிழையான சிகிச்சை காரணமாக குறித பெண் உபாதைக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து  அனலைதீவு பொலிஸார் பெண்ணின் கணவனையும் சிகிச்சை அளித்த சிற்றூழியரையும் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X