2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பஸ் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் மரணம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (ரஜனி)

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். நேற்றிரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர - தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்...

“கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த பயணிகளும் இவ்விவகாரத்தில் தலையிடவே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பெரிதாவதை அறிந்த ஓட்டுநர் பஸ்ஸை சடுதியாக திருப்ப முனைகையில் தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர் எகிறி விழுந்து பஸ் சில்லில் அகப்பட்டு மரணமாகியுள்ளார். பஸ் நடத்துனர், ஓட்டுநர் ஆகியோரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்...” என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Ameerudeen Sunday, 05 August 2012 06:26 AM

    மிகவும் வன்மையாகக் கன்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

    Reply : 0       0

    ஷிர்டி Sunday, 05 August 2012 03:04 PM

    இப்படி எப்பவும் அப்பாவிகள் பாதிக்கப் படவே செய்கின்றனர்!!! மனிதம் மரணித்தா விட்டது - சில்லறைக்காக!!! இதற்கு உரிய பதில் கூறப் போவது யார்!

    Reply : 0       0

    vijee batti caloa m Sunday, 05 August 2012 04:01 PM

    சட்டத்தின் முன்னிருத்தி தகுந்த தன்டனை
    வாங்கி கொடுக்க வேன்டும்

    Reply : 0       0

    Payani Sunday, 05 August 2012 04:09 PM

    பஸ் நடத்துநர்களின் செயற்பாடு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. விசேடமாக யாழ் கொழும்பு பேருந்துகளில் பயணிகளை கேவலமாக நடத்துகின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X