2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பக்தர்களின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியல்

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

நல்லூர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் 14 பவுண் தங்க நகைகளை திருடிய 7 பேருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி நல்லூர் ஆலயத்தில் நகைகளை திருட்டு கொடுத்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை பதிவு செய்ததற்கு இணங்க, கடந்த மாதம் 26ஆம் திகதி புத்தளத்தினை சேர்ந்த  4 பெண்கள் உட்பட 3 ஆண்கள் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா எதிர்வருமு; 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X