2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தாதிய பயிற்சிக்கு சமூகமளிக்காத காரணத்தை தெரிவிக்குமாறு உத்தரவு

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

தாதிய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கு நியமனம் கிடைக்கப்பெற்று பயிற்சிக்கு சமுகமளிக்காத 60 பேரையும் சமுகமளிக்காத காரணத்தினை விரைவில் தெரியப்படுத்துமாறு யாழ். தாதிய கல்லூரி அதிபர் ரஜிலாதேவி அறிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் தாதியர் பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் வடக்கு கிழக்கில் 216 பேர் தாதிய பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு சுகாதார அமைச்சினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தாதிய பயிற்சிக்கு 5 வீதமானவர்களே ஆண்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் 29 பேர் தாதிய பயிற்சிக்கு நியமிக்கப்பட்டனர். அதில் 10 பேர் தாதிய பயிற்சி கல்லூhயில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

பதிவுகளை மேற்கொள்ளாத 19 ஆண்களும், 41 பெண்களும் வேறு வேலை பார்க்கின்றார்கள் என்பது பற்றியும் தெரியப்படுத்தப்படாத காரணத்தினால் இது குறித்து உடனடியாக தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபருக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 56 பேருக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பட்ட போது 44 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். 12 பேர் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X