2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைப்பாறும் மண்டபம் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். அரியாலை கிழக்கு பகுதி மீனவர்களுக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில் கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அரியாலை கிழக்குப் பகுதி மக்கள் கடற்றொழிலையே மேற்கொண்டுவருகின்றனர். இவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த இளைப்பாறும் மண்டபத்தை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் இந்த இளைப்பாறும் மண்டபம் அமைத்து முடிக்கப்பட்டு அரியாலை கிழக்கு கடற்றொழிலாளர் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் எனவும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X