2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில்  5 பேர் பிடிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு பகுதியில் நேற்று வியாழக்கிழமை  மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த 5 பேரையும் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X