2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மூளைக் காய்ச்சலில் ஒருவர் உயிரிழப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ரஜனி)
யாழில் மூளை காய்ச்சல் நோயினால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து செல்வராஜா (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

மேற்படி குடும்பஸ்தருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலை 11.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுட 24 மணித்தியாலயங்களில் இவர் உயிரிழந்துள்ளார்.

தலைச்சுற்றும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் காலம்தாழ்த்தி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது இவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் என கண்டறியப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

'காய்ச்சல் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளையும், கை மருத்துவங்களையும் நம்பி இருக்காது அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நோயை குணப்படுத்த முன்வர வேண்டும்.

மூட நம்பிக்கையினால் உயிர்களை பறிகொடுப்பதிலிருந்து மக்கள் விழ்ப்புணர்வை பெறுவது மிகவும் அவசியம்' என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X