2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூரில் கைகலப்பு; இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

நல்லூர் கந்தசுவாமி கோவில் வெளிவீதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட இரு இளைஞர் குழு வெற்றுப் போத்தல்களால் தாக்கிக் கொண்டமையாலேயே இளைஞர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரில் ஓர் இளைஞனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த பிரசன்னா (வயது 19) என்பவரே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X