2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டுவில் விபத்தில் பெண்ணொருவர் தலை நசுங்கி பலி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் தலை நசுங்கி பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

கணவன் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் குறித்த தாயும் பயணம் செய்துள்ளார். பின்னால் வந்த கன்ரர் வாகனம் விலத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளை ஓரமாக்கியபோது இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள்.

இரண்டு பிள்ளைகளும் தாயும் தகப்பனும் மோட்டார் சையிக்கிளில் தென்மராட்சி நோக்கிச்சென்று கொண்டிருந்த வேளையில் கன்ரர் வாகனம் மோட்டார் சையிக்கிளை விலத்து முற்படுகையில் அதற்கு வழிவிட கரை ஒதுங்கியபோது கற்கள் சறுக்கியதினால் மோட்டார் சையிக்கிள் சரிந்துள்ளது. இவ்வேளையில் பின்னால் இருந்த குறிப்பிட்ட தாய் நிலத்தில் வீழ்ந்தபோது கன்ரர் வாகனத்தின் டயர்கள் தலையில் ஏறி அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X