2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்பாண்ட உற்பத்பத்தியாளர்களுடனான சந்திப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழிலை விருத்தி செய்யும் நோக்கில் மட்பாண்ட உற்பத்பத்தியாளர்களுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைகளையும் மூலப்பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதுடன் உற்பத்தியை அதிகரித்தல், அவற்றின் தரத்தை உயர்த்துதல், இதன் மூலம் உள்ளூரிலும் வெளியூரிலும் சிறந்த சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள சங்காணை, உடுப்பிட்டி, தெல்லிப்பளை, கொடிகாமம், மட்டுவில் போன்ற இடங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 24 மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கான  விசேட பயிற்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X