2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வியாபார முன்னேற்ற வார ஊர்வலம்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வியாபாரத்தினை முன்னேற்றும் நோக்கத்துடன் ஊர்வலம் ஒன்றை நடாத்த யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக யாழ். அஞ்சல் திணைக்கள மேற்பார்வையாளர் எஸ்.குமாரவேள் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது வியாபாரத்தினை வலுப்படுத்தும் நோக்கத்துடன் யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள இவ் வியாபார முன்னேற்ற வார ஊர்வலம் நாளை காலை 8.30 மணிக்கு யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ். நகரம் முழுவதும் சென்று தமது வியாபார நடவடிக்கைகளை மாலை 6.30 மணிவரை முன்னெடுக்கவுள்ளது.

இவ் ஊர்வலத்தினை நாளை காலை 8.30 மணிக்கு இலங்கை அஞ்சல் திணைக்கள அதிபர் அபேரத்ன ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் யாழ். அஞ்சல் திணைக்கள மேற்பார்வையாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X