2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பலியாகிய முதியவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

வீதி விபத்தின் போது உயிரிழந்த முதியவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று மதியம் உட்கார்ந்திருந்த போது வாகனம் ஒன்று முதியவர் மீது மோதிச் சென்றுள்ளது. இதனால் முதியவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சாரம் அணிந்த நிலையில் மேற்சட்டை இல்லாதவாறு உடலில் சீமெந்து பூசப்பட்டவாறு காணப்படும் முதியவர் தொடர்பான விபரங்கள் தெரியாத நிலையில் ஆட்டோ சாரதி ஒருவரினால் முதியவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறந்த முதியவர் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X