2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாட்டைவிட்டு தப்பியோடாமல் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: சுரேஷ்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                  (ரஜனி)

குறைந்த செலவில் நாட்டைவிட்டு தப்பியோடாமல்  எமது உரிமைகளை போராடி வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு எமது தமிழ் இளைஞர்களின் கையிலுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்று கடலில் உயிரைப் பறிகொடுக்கும் பல இளைஞர்கள் சற்று சிந்தித்து முடிவெடுப்பதே மிகச் சிறந்தாகும்.  பணத்தைக் கொடுத்து நாட்டைவிட்டு தப்பியோடி சிறைக்குள் தமது நாட்களை கழிக்கும் இளைஞர்களின் அவல நிலைக்கு யார் பொறுப்பு? அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி உரிமைகளை வென்றெடுக்கவேண்டுமே தவிர, குறைந்த பணத்தில் நாட்டைவிட்டு ஓடுதல் தமிழ் இளைஞர்களை புறந்தள்ளும் செயலாகும். தமிழ் இளைஞர்கள் உயிரைப் பறிக்கும் கடல் பயணத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பிரச்சினைக்கு மத்தியில் இங்கு வாழ்ந்தாக வேண்டும். உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்காது, போராட வேண்டும். ஓடிக்கொண்டிருந்தால் எந்தவித மாற்றுவழியும் கிடைக்கப்போவதில்லை. சொந்த மண்ணிலிருந்து எமது உரிமைகளை தட்டிக் கேட்கவேண்டியது எமது கடமை. எமது நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு சிறை வாழ்க்கை வாழ்ந்து எதைச் சாதிக்கமுடியும் என்பதை இளைஞர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

மீன்பிடிப்படகில் ஒரு மாதகால பயணம் மேற்கொள்வது நலனற்ற விடயம். அங்கு சென்றவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம் தரமாட்டாது. புகலிடம் இல்லாது, வேலை இல்லாது சிறையில் வாடுவதைவிட எமது மண்ணிலிருந்து உரிமைகளை கேட்டு சுதந்திரமாக வாழவேண்டும். தமிழர்கள் ஓட நினைத்த காலத்திலிருந்து  ஓடிக்கொண்டு செல்வதை நிறுத்தவேண்டும். சொந்த மண்ணிலிருந்து போராடுவதே எமது உரிமையைப் பெற்றெடுப்பதற்கு உந்துசக்தியாக அமையும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • akaran Tuesday, 14 August 2012 10:50 AM

    ஐயா நல்லா சொன்னீங்க. நீங்க அரசியல் செய்ய மக்களும் வேண்டுமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X