2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் தபால் திணைக்களத்தின் வியாபார ஊக்குவிப்பு வார கண்காட்சி, ஊர்வலம்

Super User   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


வடமாகாணத்தில் அஞ்சல் சேவையினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் யாழ். அஞ்சல் அலுவலக வளாகத்தில் இன்று காலை அஞ்சல் முத்திரைகள் கண்காட்சியொன்று நடத்தப்பட்டதுடன் ஊர்வலமொன்றும் நடத்தப்பட்டது.

வியாபார ஊக்குவிப்பு வார திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ். மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அஞ்சல் மா அதிபர் டி.பி.எல். ரோஹன அபயரத்ன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கண்காட்சி கூடத்தினை பார்வையிட்ட அஞ்சல் மா அதிபர் டி.பி.எஸ். ரோஹண அபயரத்ன மற்றும் வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் எஸ். ரட்ணசிங்கம், ஆகியோர் அஞ்சல் வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சல்; சேவையை மேம்படுத்தும் நாடகத்தினையும் பார்வையிட்ட பின்னர் வியாபார முன்னேற்ற ஊர்வலத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

அதேவேளை, யாழ். மாவட்டம் முழுவதிலும் தமது 4 மணித்தியால கூரியர் சேவையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெபரட்ணம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் வியாபாரத்தினை முன்னேற்றவுள்ளதுடன்  வாகனங்களில் யாழ். மாவட்டத்தின் பிற பிரதேசங்களுக்கு சென்று கூரியர் சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு கிலோ மீற்றருக்கு 7 ரூபா 50 சதம் வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வவுனியா மன்னார் அஞ்சல் அத்தியட்சகர்கள் மற்றும் அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாட்டின் சமாதானத்தினை வலியுறுத்திய முத்திரைகள், அஞ்சல் திணைக்கள ஆரம்பிக்கப்பட்ட மற்றும் இலங்கையின் வரலாற்றினை மேம்மைப்படுத்தும் செயற்திட்டங்களுக்காக வெளியிடப்பட்ட பண்டைய முத்திரை என்பன காட்சிப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட வியாபார முன்னேற்றவாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அஞ்சல் மா அதிபர் டி.பி.எல்.ரோஹண அபேரத்ன இந்நிகழ்வில் உரையாற்றுகையில், வடமாகாணத்திலுள்ள அஞ்சல்  அலுவலகம் நட்டத்தில் இயங்குவதாகவும் அஞ்சல் திணைக்களம் பலதரப்பட்ட சேவைகளை வழங்கி, வியாபார முன்னேற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், நட்டத்தில் இயங்கும் திணைக்களத்தை லாபமீட்ட செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"சேவைகளை வளப்படுத்துவதன் மூலம் வியாபாரத்தினை உறுதிப்படுத்த முடியும். சிறந்த சேவைகளை முன்னெடுப்பதன் மூலம் வியாபார முன்னேற்றத்தினை மேம்படுத்துவதுடன் நட்டத்தில் இயங்கும் திணைக்களங்களை இலாபத்திற்கு கொண்டு வர முடியும்.
 
இதன் மூலம் கிடைக்கும் வருமானம் திணைக்களத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். எங்களிடம் இருப்பதை நிறைவாக மாற்றினால் ஒருமாத காலத்தில் சேவை மேம்பாட்டின் மூலம் வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தின் மூலம் இலாபத்தினை அடையலாம்.
 
அதேவேளை, வருமானத்தினை உயர்த்துவதன் மூலம் சேவையை உயர்த்தலாம். சேவையை உயர்த்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்படுமானால், அரசாங்கத்தின் மூலம் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் எமது வியாபாரத்தினை மேம்படுத்த சிறந்ததொரு வாய்ப்பாக அமையும்.
 
யாழ். மாவட்ட ஊழியர்களின் சேவையினை பார்க்கும்போது நான் மிகவும் பெருமை அடைகின்றேன். கொழும்பு சென்றவுடன் அங்கு இருக்கும் ஊழியர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வேலைத்திட்டங்களை பழகிக்கொள்ளவும், எவ்வாறு சேவைகளை முன்னேற்றகரமாக செய்கிறீர்கள் என்பதை அவர்கள் கவனத்திற்கொண்டு அந்த சேவைகளை தெற்கில் பகிர்ந்து கொண்டு நடைமுறைப்படுத்தவும் இலகுவாக இருக்கும்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இலகுவாக இருக்கும் எனவும் நான் கருதுகின்றேன். அதேவேளை, பல புதிய வியாபார தந்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அவற்றின் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறந்த சேவையை முன்னெடுத்து செய்வதன் மூலம் இலகுவாக வெற்றிகளை அடைய முடியும்' என்றார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X