2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மது அருந்திக்கொண்டிருந்தவர்களைக் கண்டித்த இளைஞன் மீது தாக்குதல்: ஐவர் கைது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (ரஜனி)
கோயில் ஒன்றுக்கு முன்னால் மது அருந்திக்கொண்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞர் குழுவொன்றைக் கண்டித்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X