2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலைன் உரிமை கோரப்படாத சடலங்களை புதைக்க புதிய இடம் பெற தீர்மானம்

Super User   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு உரிமை கோரப்படாதுள்ள சடலங்களை புதைப்பதற்கு புதிய இடத்தை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத சடலங்கள் தற்போது யாழ். பண்ணைப் பகுதியில் புதைக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருவதால் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ். போதனா வைத்திசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது ஆராயப்பட்ட போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி குழுவின் உப தலைவர் சட்டத்தரணி ரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் இந்த கலந்துகொண்டனர்.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவை கணினி மயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. யாழ். போதானா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகின்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக நீண்ட நேரங்கள் வரிசையில் காத்திருந்து மருந்து எடுப்பதற்கான சிட்டையை  பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு வெளிநோயாளர் பிரிவை கணினி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த முறை நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு தீர்வுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக போதானா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் இயங்காத நிலையில் இருந்த குளிர்சாதன பெட்டிகள் திருத்தப்பட்டு ஒரே தடவையில் 24 சடலங்கள் வைக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட குறைப்பாடுகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் சீர்செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X