2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சங்கானையில் மட்பாண்ட பயிற்சி, ஆய்வு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.மாவட்டத்தில் மட்பாண்ட தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்கானை பகுதியில் பயிற்சி மற்றும் ஆய்வு நிலையங்களை அமைப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சங்கானையில் அமைந்துள்ள அரசாங்க இயந்திர மட்கல நிலையத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், நிலையத்தின் செயற்றிட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
 
'செயலூக்கம் குறைவான நிலையிலுள்ள இந்நிலையத்தின் செயற்பாடுகளை மீளவும் நவீனமுறையில் நிபுணத்துவம் வாய்ந்த தொழிற்துறை வல்லுனர்களின் வழிகாட்டலுடன் விரைவாக இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இங்கு இயங்காத நிலையிலுள்ள இயந்திர சாதனங்களை திருத்தம் செய்வது உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய புனரமைப்பு வேலைகள் தொடர்பிலும், ஏனைய அடிப்படைத் தேவைகளான மின்சாரம், மலசலகூடம், சூளை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து இரண்டு வாரத்திற்குள் நிலையத்தின் பணிகளை தொடங்குமாறும் துறைசார்ந்தோரிடம் பணிப்புரை வழங்கியதுடன், முதற்கட்டமாக ஒருதொகுதி பயிற்சியாளர்களை இணைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிலையம் பயிற்சி நிலையமாக மட்டுமல்லாமல் ஆய்வு நிலையமாகவும் செயற்படவுள்ளதாகவும், இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களினது சந்தை வாய்ப்பு தொடர்பிலும், அதுசார்ந்தவர்களது வாழ்வாதார மேம்பாடு தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படுமெனவும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

அத்துடன், வாழ்வெழுச்சி திட்டத்தின் கீழ் மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபை பணிப்பாளர் கெங்காதரன், சங்கானை பிரதேச செயலர் சோதிநாதன், மட்பாண்ட தொழிற்துறை நிபுணர் அஜித் பெரேரா, ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X