2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஆலய சூழலில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுத்தல் தொடர்பான கண்காட்சி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான கண்காட்சி கூடத்தினை லீட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் இன்று திறந்து வைத்தார்.

நல்லூர் அரசடி வீதி மற்றும் நல்லூர் ஆலய பின் வீதியில் இக்கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் சிறுவர்களிடையே விழப்புணர்வை தூண்டும் வகையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் லீட்ஸ் நிறுவனமும் இணைந்து சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான சுலோகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டால் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், பிள்ளை பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் ஏற்படாதவாறு பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறான விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான அறவுறுத்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு பிள்ளைகளை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்புணர்வை தூண்டும் கண்காட்சி கூடத்திற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும், காட்சிப்படுத்தப்பட்ட சுலோகங்களையும் காண்பிப்பதன் மூலம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன, அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது தம்மை பாதுகாத்துக் கொள்வது என்பன தொடர்பாக அறிந்த கொள்வதற்கு உதவியாக இருக்குமென வடக்கு கிழக்கு சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் டி.பி.ஏ.ரஞ்சித்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட உளவள இணைப்பாளர் கு.கௌதமன் மற்றும் லீட்ஸ் நிறுவனத்தின் யாழ். மாவட்ட அதிகாரி கு.யனேந்திரன் உட்பட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X