2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மேல் நீதிமன்றின் புதிய சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (ரஜனி)
வடமாகாணத்தில் நீதியையும், சுதந்திரத்தினையும், மேன்மையையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் முகமாக இன்று புதிய சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற 18 பேர் கொண்ட உறுப்பினர்கள் தெரிவுடன் புதிய சட்டத்தரணிகள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம் அனைவரின் கருத்துக்களையும் வரவேற்று நீதியான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காகவே அச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத்தரணிகள் சங்கத்தில் தலைவராக முன்னாள் மாவட்ட நீதிபதி திருநாவுக்கரசு, செயலாளராக சட்டத்தரணி மு.ரெமீடியஸ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

பொருளாளராக சட்டத்தரணி ரி.ரங்கன்,  உப தலைவராக முன்னாள் மாவட்ட நீதிபதி ஆர்.வசந்தசேனன் மற்றும் வீரகத்திப்பிள்ளை, உப செயலாளராக செலஸ்ரின் உப பொருளாளராக கணாதீபன், இதழ் ஆசிரியராக சர்மினி விக்னேஸ்வரன் மற்றும் உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆர்.பி.எஸ் வரதராஜன் ஆகியோர் விளங்குகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X