2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மின்சாரசபை ஊழியர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் விடுமுறை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ரஜனி)

மின்சாரசபை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடு தொடர்பான போராட்ட காலத்தில் மின்சாரசபை ஊழியர்கள் விடுமுறை எடுப்பதற்கு அனுமதியளிக்கக்கூடாதென இலங்கை மின்சாரசபையின் உயர்மட்ட  அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்க விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் விடுமுறை தேவைப்படும்போது, இந்த விடுமுறை ஊழியர்களுக்கு அத்தியாவசியமான தேவையாகக் கருதப்படும் பட்சத்தில் அதிகாரம் உடைய  உத்தியோகத்தரினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தான் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊழியர் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டத்தின் பின்னர் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்பட்டால் அது போராட்டம் என கருதப்படுகின்றதெனவும் அப்போராட்டத்தினை தவிர்க்கும் முகமாகவே ஊழியர்களுக்கான விடுமுறைக்கு அனுமதி வழங்கவில்லையெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் யாழ். மாவட்டத்தில் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் இன்று நடைபெறவில்லையெனவும் அண்மைக்காலமாக சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் கடமைக்கு செல்லாமலிருக்கும் ஊழியர்களை 17ஆம் திகதிக்கு முன்னர் பணிக்கு வருமாறு மின்சாரசபை அறிவி;த்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X