2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பதிவு செய்யப்படாத கடல் கலங்களுக்கான பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                             (ஜெ.டானியல்)
யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத கடல் கலங்களுக்கான பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் 4000 படகுகளில் 1400 படகுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவை பதிவினை மேற்கொள்ளாமல் கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பதிவுகளை மேற்கொள்ளாத படகுகளுக்கான எரிபொருள் மானியங்கள் எதுவும் வழங்கப்படமாட்டது. யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியலவளத் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொண்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு மாதாந்த எரிபொருள் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழில் படகுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் தங்கள் படகுகளைப் பதிவு செய்யாத கடற்றொழிலாளர்கள் பதிவுகளை மேற்கொண்டு படகு பதிவு இலக்கத்தையும் அதற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.

படகுகள் பதிவு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறும் பதிவு தொடர்பான மேலதிக தகவலுக்காக 021- 0222 2532 என்ற தொலைபேசியூடாகவும் விபரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X